தமிழக செய்திகள்

காஞ்சீபுரத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

காஞ்சீபுரத்தில் கஞ்சா விற்ற 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சீபுரத்தில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காஞ்சீபுரம், காமாட்சி அம்மன், மேற்கு மாடவீதி, நாகலுத்துமேடு, காஞ்சீபுரம் அருகே தாமல் ஏரிக்கரை ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காஞ்சீபுரம் பள்ளத்தெருவைச் சேர்ந்த வரதன் (வயது 38), நாகலுத்துமேட்டை சேர்ந்த ராகுல் (18), சன்னதித்தெருவை சேர்ந்த விக்னேஷ் என்கிற பூனை விக்னேஷ் (24), ஆகிய 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். மேலும், போலீசார் அவாகளிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்