தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 3 பேர் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் திருடிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணிகண்டன் (வயது 25). கூலி தொழிலாழி. இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சீதஞ்சேரி பஜார் வீதிக்கு சென்றார். அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை. இது குறித்த அவர் பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை உத்தரவின் பெயரில் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் பூண்டி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தை சேர்ந்த விஸ்வா (19), கில்பர்ட் கிரேஸ் ராஜ் (19), தங்கதுரை (20) என்ற வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிந்தது. இந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் திருவள்ளூர், புல்லரம்பாக்கம், பென்னாலூர் பேட்டை ஆகிய பகுதிகளில் 3 மோட்டார் சைக்கிள் திருடியது தெரியவந்தது. அந்த 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 வாலிபர்களையும் போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை