தமிழக செய்திகள்

மதுரையில் பெரியாறு பாசன கால்வாயில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி பலி

மதுரையில் பெரியாறு பாசன கால்வாயில் குளித்த 2 சகோதரர்கள் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

மதுரை,

மதுரை முனிச்சாலை ரோடு ருக்மணிபாளைய பகுதியை சேர்ந்தவர் ராமு. இரும்பு கடை வைத்துள்ளார். இவரது மகன் கோபி (வயது 19). பிளஸ் 2 முடித்து, தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். இன்னொரு மகன் கிஷோர் (வயது 18). பிளஸ் 2 முடித்துள்ளார்.

இந்த சகோதரர்களின் நண்பர்கள் ஹரிஹரன் (வயது 17) மற்றும் சூர்யகுமார் (வயது 15). இவர்கள் தவிர 4 பேர் ஒத்தக்கடை அருகேயுள்ள துக்கலப்பட்டி பெரியாறு பாசன கால்வாய்க்கு குளிக்க சென்றனர்.

இந்த நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு, மின்திட்ட பணிக்காக கால்வாயில் அமைக்கப்பட்ட பகுதியில் குளித்தபோது 4 பேரும் நீரில் மூழ்கினர். அவர்களது நண்பர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலுர் தீயணைப்பு வீரர்கள், ஒத்தக்கடை போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் கோபி, கிஷோர், ஹரிஹரன் ஆகிய 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. சூர்யகுமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது