தமிழக செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

சிவகாசியை சேர்ந்த சகோதரிகள் இருவர் உள்பட 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

தினத்தந்தி

நெல்லை,

சிவகாசியை சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் சேர்ந்து திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் அனைவரும் குளித்துள்ளனர்.

அப்போது குளித்துக்கொண்டிருந்த முருகனின் மகள்கள் மேனகா (18), சோலை ஈஸ்வரி (15) மற்றும் அவரது உறவினரான சங்கரேஸ்வரன் (40) என 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு