பொன்னேரியில் உள்ள பஸ் நிலையத்தில் பொன்னேரி தேரடி பர்மா நகரை சேர்ந்த யுவராஜ் (வயது 27), சுண்ணாம்புகுளம் பகுதியை சேர்ந்த சரவணன் (18), வைரவன்குப்பம் பகுதியை சேர்ந்த பூவரசன் (26) ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து பட்டாக்கத்தியால் வெட்டி ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இந்நிலையில் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ஒருவரை பஸ் பயணிகள் மடக்கிப்பிடித்து, போலீசிடம் ஒப்படைத்தனர். அதில் அவர், பொன்னேரி என்.ஜி.ஓ. நகரைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது.
மேலும் அவர் அளித்த தகவலின் பேரில், தமிழ்ச்செல்வனை கைது செய்து செல்போன் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான விஜய், ஸ்டீபன் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர். பட்டாக்கத்தியால் வெட்டப்பட்ட 3 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.