தமிழக செய்திகள்

காட்டாங்கொளத்தூர் அருகே மது விற்ற பெண்கள் உட்பட 3 பேர் கைது

காட்டாங்கொளத்தூர் அருகே மது விற்ற பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள காவனூர் மெயின் ரோடு பகுதியில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் காவனூர் சாலையில் மது விற்பனை செய்து கொண்டிருந்த பாபு (வயது 51), என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல காட்டாங்கொளத்தூர் திருப்பன ஆழ்வார் தெருவில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த சித்ரா (வயது 40), வள்ளி (57) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்