விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள சிறுவாக்கூர் பகுதியில் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தனன் (வயது 33), ஜானகிராமன் (28), ஸ்ரீதர் (35) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.