தமிழக செய்திகள்

பண்ருட்டி அருகே 3 பேரை கத்தியால் குத்திவிட்டு மோட்டார் சைக்கிள் திருட்டு

பண்ருட்டி அருகே 3 பேரை கத்தியால் குத்திவிட்டு மோட்டார் சைக்கிள் திருடிய பெண் உள்பட 4 பேரை போலீசா வலைவீசி தேடி வருகின்றனா.

தினத்தந்தி

பண்ருட்டி, 

பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில் வசிப்பவர் கிருஷ்ணராஜ்(வயது 52). இவர் தனது வீட்டின் அருகிலேயே இருசக்கர வாகன பாதுகாப்பு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணியளவில் இருசக்கர வாகன பாதுகாப்பு நிலையத்துக்கு வந்த பெண் உள்பட 4 பேர் அங்கிருந்த ஒரு மோட்டார் சைக்கிளை திருட முயன்றனர். இதைபார்த்த கிருஷ்ணராஜ், அவருடைய மனைவி காந்திமதி, மகன் ஹரிகரன் ஆகிய 3 பேரும் அந்த மர்ம நபர்களை பார்த்து யார் நீங்கள் என கேட்டு சத்தம் போட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் கத்தரிக்கோல் மற்றும் கத்தியால் கிருஷ்ணராஜ் உள்பட 3 பேரையும் குத்தினர். இதில் காயமடைந்த அவர்கள் 3 பேரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் உள்ளிட்ட 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு