தமிழக செய்திகள்

காவிரி ஆற்றில் சிக்கிய பெண் உள்பட 3 பேர் மீட்பு

காவிரி ஆற்றில் சிக்கிய பெண் உள்பட 3 பேர் மீட்கப்பட்டனர்.

தினத்தந்தி

கரூர் மாவட்டம், கடவூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 21). வெள்ளியணை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (20). அதே பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (21). இவர்கள் 3 பேரும் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இந்தாண்டு பட்டப்படிப்பு முடித்து உள்ளனர். இவர்கள் நண்பர்களும் ஆவார்கள். இந்தநிலையில் நேற்று 3 பேரும் மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். பின்னர் அங்குள்ள காவிரி ஆற்று பகுதியின் நடுப்பகுதி சென்று 3 பேரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த 3 பேரும் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என அபாய குரல் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காவிரி ஆற்றில் சிக்கிய 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து