தமிழக செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பவர்களுடன் தொடர்பில் இருந்ததாக புகார் - 3 போலீசார் சஸ்பென்ட்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பவர்களுடன் தொடர்பில் இருந்த 3 போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பவர்களுடன் தொடர்பில் இருந்த 3 போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அரக்கோணம் டவுண் காவலர் கண்ணன், சோளிங்கர் தலைமைக்காவலர் வேணுகோபால், அரக்கோணம் தாலுகா காவலர் ரமேஷ் ஆகிய மூவரை சஸ்பெண்ட் செய்து ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபாசத்யன் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் மூவரும் கஞ்சா விற்பவர்களுடன் தொடர்பில் இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து விசாரணைக்குப் பிறகு மாவட்ட எஸ்பி மூன்று போலீசாரையும் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் போலீசார் அவர்களுடன் தொடர்பில் இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை கடுமையாக எடுக்கப்படும் என்பதையே இது காட்டுகிறது. 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு