தமிழக செய்திகள்

3 வாலிபர்கள் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

கோவில்பட்டி:

கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ரயில் நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் மூப்பன்பட்டி அன்னை வேளாங்கண்ணி நகரைச் சேர்ந்த சங்கரபாண்டி மகன் சசிகுமார் (வயது 25), ஸ்ரீவில்லிபுத்தூர் பாலசுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் வைரமுத்து (23), எட்டயபுரம் அருகே இளம்புவனத்தைச் சேர்ந்த திருமணி மகன் பவுன்ராஜ் (31) என்பதும், 3 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

சசிகுமார், வைரமுத்து மற்றும் பவுன்ராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 60 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சசிகுமார் மீது கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, சாத்தூர் டவுன், கோவை மாவட்டம் அப்பநாயக்கன்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் 14 வழக்குகளும், பவுன்ராஜ் மீது எட்டயபுரம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை