தமிழக செய்திகள்

சிவகங்கை மார்க்கமாக செல்லும் 3 ரெயில்கள் இன்று மீண்டும் இயக்கம்

சிவகங்கை மார்க்கமாக செல்லும் 3 ரெயில்களின் சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை,

கொரோனா பரவல் காரணமாக சிவகங்கை மார்க்கமாக செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் மற்றும் திருச்சி-ராமேஸ்வரம் பயணிகள் ரெயில் ஆகியவை கடந்த மே மாதத்தின் முதல் வாரத்தில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் இந்த 3 ரெயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சேது எக்ஸ்பிரஸ் இன்று இரவு 8 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுகிறது. அதே போல் திருச்சியில் இருந்து சிவகங்கை வழியாக ராமேஸ்வரம் வரை செல்லும் பயணிகள் ரெயில், காலை 7 மணிக்கு புறப்பட்டது. ஊரடங்கிற்கு இடையில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ரெயிலில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்