தமிழக செய்திகள்

மணல் கடத்திய 3 லாரிகள், பொக்லைன் எந்திரம் பறிமுதல்

மணல் கடத்திய 3 லாரிகள், பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

இலுப்பூர் சத்தியநாதபுரம் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக சிறப்புப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் சத்தியநாதபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்த போது, அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 லாரியையும், மணல் கடத்த பயன்படுத்திய பொக்லைன் எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்து இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விராலிமலை பகுதியை சேர்ந்த மசி, கொல்லிமலை, நாகராஜ், சக்திவேல், குமார் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமயம் அருகே லெனா விலக்கு பகுதியில் நமணசமுத்திரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்கீரை சாலையில் டிப்பர் லாரியை போலீசார் மறித்தனர். போலீசார் நிற்பதை பார்த்த டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். தொடர்ந்து போலீசார் லாரியை சோதனை செய்த போது, அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து நமணசமுத்திரம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து லாரி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்