கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஶ்ரீபெரும்புதூர் அருகே விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியான சம்பவம்: ரூ.10 லட்சம் நிதிஉதவி - தமிழக அரசு அறிவிப்பு

ஶ்ரீபெரும்புதூர் அருகே விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியான சம்பவத்திற்கு, ரூ.10 லட்சம் நிதிஉதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்பேது விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்தனர்.

ஶ்ரீபெரும்புதூர் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பாக்கியராஜ்(40), முருகன்(40), ஆறுமுகம்(42) ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பலியானவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஶ்ரீபெரும்புதூர் அருகே விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியான சம்பவத்திற்கு, ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உயிரை திரும்பி தர இயலாது என்றாலும், அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தலா ரூ.10 இலட்சம் நிவாரண நிதிஉதவி அளிக்கப்படுகிறது. மேலும், இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படியிலான நடவடிக்கை கட்டாயம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்