தமிழக செய்திகள்

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்து 3 தொழிலாளிகள் படுகாயம்

புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்து 3 தொழிலாளிகள் படுகாயமடைந்தனர்.

தினத்தந்தி

புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் சாலையில் கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மாலை வேலை நடைபெற்று கொண்டிருந்தபோது தீடீரென தனியார் தொழிற்சாலையின் 60 அடி நீள சுற்று சுவர் இடிந்து விழுந்தது. இதில் மசூப் (வயது 34), நதின் (28) சானபாக் (18) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆபத்தான நிலையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கால்வாய் ஒப்பந்த நிறுவன மேலாளரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்