தமிழக செய்திகள்

குறிஞ்சிப்பாடியில்கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

குறிஞ்சிப்பாடியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா.

தினத்தந்தி

குறிஞ்சிப்பாடி, 

குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குறிஞ்சிப்பாடி அலமேலு அம்மாள் நகரில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்களை போலீசார் நிறுத்தினர்.

அப்போது 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிப்பட்ட 2 பேரிடம் போலீசார் விசாரித்தனர். அதில், குறிஞ்சிப்பாடி பாட்டை வீதியை சேர்ந்த சேகர் மகன் பாலமுருகன் (வயது 24), ஆரோக்கியநாதன் மகன் ஆல்பர்ட் எடிசன் (22) என்பதும், அவர்களிடம் விற்பனை செய்வதற்காக கஞ்சா இருந்ததும் தொயவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா, 150 பாக்கெட் ஹான்ஸ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

தப்பி ஓடிய கு.நெல்லிக்குப்பம் தெற்கு தெரு ரவி மகன் ராகுல், அலமேலு அம்மாள் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலாஜி ஆகியோரை தேடி வருகின்றனர்.

இதேபோல் குறிஞ்சிப்பாடி ரெயிலடி பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குறிஞ்சிப்பாடி சின்ன கடை வீதியை சேர்ந்த குப்புசாமி மகன் விக்னேஷ் (21) என்பவரையும் கைது செய்து, ரூ5 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா, மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்