சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது.
தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 662 ஆக உயர்ந்துள்ளது. 946 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். வீட்டுக்கண்காணிப்பில் 23,760 பேரும், அரசுக்கண்காணிப்பில் 155 பேரும் உள்ளனர். கண்காணிப்பு முடித்தவர்கள் எண்ணிக்கை 87,159 ஆகும். இந்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.