தமிழக செய்திகள்

ஆட்டோவில் கடத்த முயன்ற 350 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

ஆட்டோவில் கடத்த முயன்ற 350 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

கொல்லங்கோடு:

நித்திரவிளை போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் தலைமையிலான போலீசார் நேற்று மாலையில் விரிவிளை சந்திப்பு பகுதியில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக கேரள பதிவெண் கொண்ட 2 ஆட்டோக்கள் சந்தேகப்படும்படியாக வந்தது. உடனே போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அவர்கள் ஆட்டோவை நிறுத்தாமல் ஓட்டி சென்றனர். பின்னர் மடக்கி பிடித்த போது டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் ஆட்டோவை சோதனை செய்ததில் 350 லிட்டர் மானிய விலை மண்எண்ணெய் கேன்களில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை டிரைவர்கள் கேரளாவுக்கு கடத்த முயன்றுள்ளனர். தொடர்ந்து ஆட்டோக்களுடன் மண்எண்ணெயை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு