தமிழக செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.60.44 கோடி மதிப்பிலான 36 புதிய திட்டப் பணிகள்: முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.60.44 கோடி மதிப்பிலான 36 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு நடத்தினார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற முதலமைச்சருக்கு, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் சென்ற முதலமைச்சர் பழனிசாமி, அங்கு ரூ.60.44 கோடி மதிப்பிலான 36 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் ரூ.153.92 கோடி மதிப்பிலான 21 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து ரூ.54.22 கோடியில் 2,736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்