தமிழக செய்திகள்

பொறியியல் படிப்புக்கான 3-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13-ம் தேதி தொடங்கும் - அமைச்சர் பொன்முடி

பொறியியல் படிப்புக்கான 3-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13-ம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2- சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. வரும் அக்டோபர் 13-ம் தேதி 03-வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது. பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 5-ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார்.

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை 4 கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும். அக்டோபர் இறுதியில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். 12- ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேரப்பதற்கு, அந்தந்த கல்லூரி முதல்வர்கள் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்படும்.

மேலும், பேருந்து கட்டணம் பற்றி விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?