தமிழக செய்திகள்

தொழிலாளிகளை தாக்கிய 4 பேர் கைது

முள்ளக்காடு பகுதியில் தொழிலாளிகளை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்பிக்நகர்:

முள்ளக்காடு ராஜீவ்நகர் 7-வதுதெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகன் ராசையா (வயது 38). உப்பள தொழிலாளி. இவருடைய மாமியார் வீட்டில் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் முகேஷ் (20), மாரியப்பன் மகன் பாலா (19), முருகன் மகன் ஆனந்தராஜ் (22), கல்யாணி மகன் அருண் (20) ஆகியோர் தகராறு செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ராசையா அவர்களை கண்டித்துள்ளார். இதை தொடர்ந்து அந்த 4 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் நேற்று காலையில் எம். சவேரியாபுரம் பள்ளிக்கூடம் அருகே ராசைய்யா மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, அந்த 4பேரும் வழிமறித்து அவரை தாக்கி மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தினர். இதேபோன்று அந்த 4 பேரும் அதே பகுதியை சேர்ந்த சின்னதம்பி மகன் கருப்பசாமி (36) என்பவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகார்களின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகேஷ் உள்ளிட்ட 4 பேரையும் கைது சய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்