தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் மீனவரை வெட்ட முயன்ற 4 பேர் கைது‍: ஆயுதங்கள் பறிமுதல்

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூட பகுதியில் தொழில் போட்டி காரணமாக சம்பவத்தன்று தகராறு நடைபெறுவதாக வடபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தினத்தந்தி

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூட பகுதியில் தொழில் போட்டி காரணமாக சம்பவத்தன்று தகராறு நடைபெறுவதாக வடபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், கீழ அழகாபுரியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை 4 பேர் கும்பல் அரிவாளால் வெட்ட முயன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அங்கு ஆயுதங்களுடன் நின்றிருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் தூத்துக்குடி பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த மரியபிரான்சிஸ் ரேவந்த் (வயது 28), ஜார்ஜ் ரோடு பகுதியை சார்ந்த இருதய ஸ்டீபன்ராஜ்(31), கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த பெர்னிக்(23) மற்றும் அவரது சகோதரர் சஞ்சய்(19) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். 

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்