தமிழக செய்திகள்

அதிகாரிகளை கொல்ல முயன்ற 4 பேர் கைது

பரங்கிப்பேட்டை அருகே அதிகாரிகளை கொல்ல முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரங்கிப்பேட்டை, 

புதுச்சேரி மற்றும் கடலூரை சேர்ந்த மீனவர்கள் சிலர், பரங்கிப்பேட்டை அடுத்த அன்னங்கோவில் பகுதியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து கொண்டிருந்தனர். இதுபற்றி அறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் படகில் விரைந்து சென்று, வலை மற்றும் படகை பறிமுதல் செய்தனர். இதில் ஆத்திரமடைந்த மீனவர்கள், தங்களது படகால் அதிகாரிகள் மீது மோதுவது போல் வந்து அவர்களிடமிருந்த படகு மற்றும் வலைகளை பறித்து சென்றனர்.

இதுகுறித்து மீன்வளத்துறை ஆய்வாளர் பக்ருதீன், பரங்கிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து, அவர்கள் மீது படகு ஏற்றி கொல்ல முயன்றதாக, தேவனாம்பட்டினத்தை சேர்ந்த கன்னியப்பன்(வயது 56), ஹரி கிருஷ்ணன் மகன் மணிவண்ணன்(36), முத்துகிருஷ்ணன்(46), செல்வம்(55) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்