தமிழக செய்திகள்

சசிகலா மீது 4 வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மீதான அந்நியச்செலாவணி மோசடி வழக்கில் காணொலிக்காட்சி மூலம் எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

ஜெஜெ டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து மின்னணுக்கருவிகள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அந்நியச்செலாவணி மேசடி வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, அந்நியச்செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக காணொலிக்காட்சி மூலம் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் மலர்மதி முன்பு ஆஜரானார். இந்த வழக்கில் சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

சசிகலா மீது 4 வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோடநாடு எஸ்டேட் வாங்கியதில் முறைகேடு என்று அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சசிகலா வாக்குமூலம் அளித்து உள்ளார்.

சசிகலாவிடம் பிப்ரவரி 12-ம் தேதி அமலாக்கத்துறை குறுக்கு விசாரணை செய்யும். சசிகலா மீதான 4 வழக்குகளை 4 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்