தமிழக செய்திகள்

பள்ளி வாகனம்-மினி பஸ் மோதி விபத்து 4 குழந்தைகள் காயம்

கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளி நேற்று மாலை முடிந்த பின்னர், பள்ளி வாகனம் ஒன்று மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளி நேற்று மாலை முடிந்தது. பின்னர் பள்ளி வாகனம் ஒன்று மாணவர்களை ஏற்றிக் கெண்டு சென்றுள்ளது. கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ள பெட்ரோல் பல்க் அருகேயுள்ள மாணவர்களை இறங்கி விட்டு, பெட்ரோல் பல்க் வழியாக அந்த பள்ளி வாகனம் மெயின் சாலைக்கு வந்த போது, கூசாலிபட்டியில் இருந்து பஸ் நிலையம் நோக்கி சென்ற ஒரு தனியார் மினி பஸ் பள்ளி வாகனம் மீது மோதியது.

இதில் பள்ளி வாகனத்தின் கண்ணாடி உடைந்து வாகனத்தில் இருந்த 4 குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தைகள் வீடு திரும்பினர். விபத்து குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்