தமிழக செய்திகள்

ராஜேந்திர பாலாஜியை சந்தித்த 4 முன்னாள் அமைச்சர்கள்...!

சிவகாசி அருகே ராஜேந்திரபாலாஜியை முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் நேற்று சந்தித்தனர்.

தினத்தந்தி

சிவகாசி,

பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு 4 வாரம் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து திருச்சி சிறையில் இருந்து கடந்த 13-ந்தேதி விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான அவர் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் வீட்டில் தங்கி உள்ளார்.

இந்தநிலையில் நேற்று மதியம் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார். சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான் மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பலர் ராஜேந்திரபாலாஜியின் வீட்டுக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு வந்தனர்.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை ராஜேந்திரபாலாஜி சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் வீட்டிற்குள் சென்ற அவர்கள் ராஜேந்திரபாலாஜியிடம் பேசினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அதன் பின்னர் மாலை 6 மணிக்கு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர்.

இந்த சந்திப்பு எதிர்பாராத வகையில் திடீரென நடைபெற்றதாக அதிமுக நிர்வாகிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழா திருத்தங்கலில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டில் அதிமுக நிர்வாகிகளுடன் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பங்கேற்ற நிலையில் அதனைத் தொடர்ந்து 4 முன்னாள் அமைச்சர்களும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வீட்டுக்கு வந்து நேரில் சந்தித்து சென்ற சம்பவம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து