தமிழக செய்திகள்

கார் மீது டேங்கர் லாரி மோதியதில் 4 பேர் படுகாயம்

கார் மீது டேங்கர் லாரி மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

தஞ்சை காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது73). இவருடைய மனைவி பத்மினி (67). இவர்களுடைய மகன் கார்த்திகேயன் மற்றும் கார்த்திகேயன் மகள் ஸ்ரீநிதி ஆகிய 4 பேரும் தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். செங்கிப்பட்டி பாலத்தை கடந்து கார் சென்ற போது திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த டேங்கர் லாரி பிரிவு சாலை அருகே திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் மீது டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்து அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா