கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

புனேவில் இருந்து 4 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 3 கோடியே 50 லட்சத்து 64 ஆயிரத்து 560 தடுப்பூசிகள் வந்து உள்ளன.

இதனிடையே மாநிலம் முழுவதும் வரும் 12ம் தேதியன்று 10 ஆயிரம் சிறப்பு முகாம்களை நடத்தி 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கூடுதலாக 1 கோடி தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் புனேவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 34 பெட்டிகளில் 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. பின்னர் அவை, தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை