தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி; 2 பேர் பலி

மீனவர்கள் உதவியோடு ஜோதி, தீபிகாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் இன்று காலை சிறிய மதகுகள் அருகில் இருந்து 4 பேர் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்கள் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த சாரதாம்மாள் (வயது 75) அவரது மருமகன் லட்சுமண மூர்த்தி (வயது 50) மகள் ஜோதி (வயது 45) பேத்தி தீபிகா (வயது 20) என தெரியவந்தது.

மேலும் அவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் சாரதாம்மாள், லட்சுமணமூர்த்தி அகையோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில் அருகில் இருந்த மீனவர்கள் உதவியோடு ஜோதி மற்றும் தீபிகாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை