தமிழக செய்திகள்

ஆடு திருடியதாக சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

ஆடு திருடியதாக சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த மகாலிங்கத்தின் மனைவி ராணி (வயது 42). கூலி தொழிலாளி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது ஆடுகளை தனது வயல்காட்டுக்கு ஓட்டிச்சென்று மேய்த்துவிட்டு, வழக்கம்போல் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் கட்டிவிட்டு தூங்கச்சென்றார். நேற்று அதிகாலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதையடுத்து அவர் அங்கு வந்து பார்த்தபோது, 4 பேர் ஒரு மொபட்டில் ஆட்டை திருடிச்சென்றனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ராணி புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் விசாரணை நடத்தி, ஆட்டை திருடியதாக சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ரஜினிகாந்தின் மகன் ராஜேஷ் (21), வேணாநல்லூர் கிராமத்தை சேர்ந்த உலகநாதன் மகன் கண்ணன் (22) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை