தமிழக செய்திகள்

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 4 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கணவனை, கொலை செய்த மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம், கும்பகோணம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்பிரபு தச்சு வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு வந்தவாசியில் வசித்து வரும் கவிதா என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் செந்தில்பிரபு நாள்தோறும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்ட செந்தில் பிரபுவை, கவிதா, அவரது தாய் உள்ளிட்ட 4 பேர் துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக தனது கணவர் வீட்டில் இறந்து கிடந்ததாக மனைவி நாடகம் ஆடியது விசாரணையில் தெரிய வந்தது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை