தமிழக செய்திகள்

மதுபோதை தகராறை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டுக்கு அடி-உதை 4 பேர் கைது

மதுபோதை தகராறை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

கிண்டி,

சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் 4 பேர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து மது அருந்தி கொண்டு ரகளை செய்வதாக கிண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த ஏட்டு பாஸ்கர், சம்பவ இடத்துக்கு சென்று மது போதையில் தகராறு செய்து கொண்டிருந்த 4 பேரையும் எச்சரித்து அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினார்.அதற்கு மறுத்து போலீஸ் ஏட்டு பாஸ்கரிடம் அவர்கள் தகராறு செய்தனர். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து பாஸ்கரை அடித்து உதைத்தனர். இதில் போலீஸ் ஏட்டு பாஸ்கரின் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. அவர் சைதாப்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இது பற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாக கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் சுதர்சன் (26), சுதாகர் (35), முருகானந்தன் (31), காமராஜ் (49) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை