லாலாபேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேங்காம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (50), லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்த குமார் (35), பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ஜெகநாதன் (45), ஐநூற்றுமங்கலத்தை சேர்ந்த பாரதிராஜா (42) ஆகிய 4 பரும் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.