தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி மாணவி உள்பட 4 பேர் காயம்

சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மோதி மாணவி உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

குமாரபாளையம்

குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலையில் தனியார் கல்லூரியின் எதிரே அதன் தங்கும் விடுதி உள்ளது. நேற்றுமுன்தினம் விடுமுறை என்பதால் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தங்கள் ஊருக்கு சென்று விட்டு நேற்று விடுதிக்கு திரும்பினர். இந்நிலையில் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது சேலத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், பொறியியல் கல்லூரியை சேர்ந்த கவுசல்யா என்ற மாணவியும், ஆஷிக்குமார், தியானேஷ்வரன் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவா உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் காயமடைந்த 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை