தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா விற்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

அரக்கோணம்

கஞ்சா விற்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

அரக்கோணம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அரக்கோணம் பகுதியை சேர்ந்த குருபிரசாத், கவுதம், ஜெகன், 4பன்னீர்செல்வம் ஆகியோரை அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இவர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார். இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு