தமிழக செய்திகள்

வாடகை பாக்கி செலுத்தாததால் கோவிலுக்கு சொந்தமான 4 கடைகளுக்கு 'சீல்'

பெரியகுளத்தில் வாடகை பாக்கி செலுத்தாததால் கோவிலுக்கு சொந்தமான 4 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தினத்தந்தி

பெரியகுளம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 28 கடைகள் தென்கரை, வைகை அணை சாலையில் உள்ளது. இந்த கடைகளில் வாடகைக்கு இருந்து வரும் வியாபாரிகள் சிலர் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இதையடுத்து அதிக அளவில் வாடகை பாக்கி வைத்திருந்த கடைகளுக்கு 'சீல்' வைத்து, அதனை கையகப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, திண்டுக்கல் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின்பேரில் தேனி உதவி ஆணையர் கலைவாணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று பெரியகுளம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 4 கடைகளுக்கு 'சீல்' வைத்தனர். . இந்த நடவடிக்கையில், இந்துசமய அறநிலையத்துறை தாசில்தார் யசோதா, சரக ஆய்வாளர் கார்த்திகேயன், கோவில் அறங்காவலர் மணி மற்றும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர்.

தென்கரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் வாடகை பாக்கி செலுத்தாத 7 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து