தமிழக செய்திகள்

வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

பழனியை அடுத்த நரிக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (வயது 23). இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட கர்ணனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்