தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

பாபநாசம் அருகே கஞ்சா விற்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

பாபநாசம்:

பாபநாசம் அருகே கஞ்சா விற்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை பகுதியில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் கஞ்சா வைத்திருப்பதாகவும், உடனே அந்த பகுதிக்கு வந்தால் அவர்களை பிடித்து விடலாம் எனவும் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன் பேரில் திருப்பாலைத்துறை குடமுருட்டி ஆற்றின் கரை ஓரத்தில் 2 இரு சக்கர வாகனத்தில் 4 பேர் வந்துள்ளனர். அவர்களை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

200 கிராம் கஞ்சா

விசாரணையில் அவர்கள், அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (வயது25), கட்டை என்கின்ற கதிர்வேல் (22), ஜம்புகேஸ்வரர் (22), விருதாச்சலத்தை சேர்ந்த முகமது சல்மான் (19) ஆகிய 4 பேர் என்பது தெரிய வந்தது.

பின்னர் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் சோதனை செய்தனர். இதில் 200 கிராம் கஞ்சா வைத்திருந்ததும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது.

4 பேர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை பாபநாசம் நீதிபதி அப்துல்கனி முன்பு ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு