நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சட்டவிரோத மது விற்பனையை தடுக்க உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் கடந்த 19-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 314 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.