தமிழக செய்திகள்

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 40 மேஜை, இருக்கைகள்

செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 40 மேஜை, இருக்கைகளை தனுஷ்குமார் எம்.பி. வழங்கினார்

தினத்தந்தி

செங்கோட்டை:

செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினா தனுஷ்குமா தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாணவிகளுக்கு 40 மேஜை, இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தனுஷ்குமார் எம்.பி. தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணி, உதவித்தலைமை ஆசிரியை மனோன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் காளிராஜ் வரவேற்று பேசினார். பின்பு பள்ளிக்கு 40 மேஜை, இருக்கைகள் வழங்கி தனுஷ்குமார் எம்.பி. பேசும்போது, மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவேன், என்றார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் எஸ்.எம்.ரஹீம், மேரி அந்தோணிராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் குட்டி ராஜா, மணிகண்டன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்