சென்னை,
தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் அடிப்படையில் 400 தற்காலிக ஓட்டுநர்களை நியமனம் செய்ய போக்குவரத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் 400 ஓட்டுநர்களையும் நியமிக்க போக்குவரத்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை, திருச்சி, நாகை, கும்பகோணம், மதுரை, கோவை உள்ளிட்ட 12 வழித்தடத்தில் ஒப்பந்த ஓட்டுநர்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டுநர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்ட நிலையில், சென்னையை சேர்ந்த 4 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.