தமிழக செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் போலீஸ் வேலைக்கு 4,062 பேர் தேர்வு எழுதினார்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் போலீஸ் வேலைக்கு 4,062 பேர் தேர்வு எழுதினார்கள்.

தினத்தந்தி

4,062 பேர் தேர்வு எழுதினர்

தமிழக அரசு அறிவித்திருந்த இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்புத்துறையினர், சிறை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. இது போல செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக 5,208 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் திருநங்கைகள் 2 பேர், பெண்கள் - 802 பேர், ஆண்கள் 4,404 பேர் ஆவர்.

இவர்களுக்கான தேர்வு காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாகத்தில் 6 மையங்களில் நடைபெற்றன. இந்த தேர்வில் விண்ணப்பித்திருந்த 5,208 பேரில் 4,062 பேர் மட்டும் தேர்வு எழுதினார்கள்.

பாதுகாப்பு பணியில்

தேர்வு அமைதியான முறையிலும் எந்த வித அசம்பாவிதமும் இன்றி நடைபெற போலீஸ் ஐ.ஜி. மல்லிகா, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். பிரதீப், தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராம், 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்