கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து

கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரை - தாம்பரம், கடற்கரை - செங்கல்பட்டு, தாம்பரம் - கடற்கரை, செங்கல்பட்டு - கடற்கரை, காஞ்சீபுரம் - கடற்கரை, திருமால்பூர் - கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மதியம் 11.55, மதியம் 12.45, மதியம் 1.25, மதியம் 1.45 மதியம் 2.20, மதியம் 2.55 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கத்தில் செங்கல்பட்டு - தாம்பரம் இடையே காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, மதியம் 12, மதியம் 1 ஆகிய நேரங்களிலும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்