கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 455 பேருக்கு கொரோனா தொற்று: மேலும் 6 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக இன்று 455 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் மேலும் 455 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 8,45,575 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 6 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 3 பேர், தனியார் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,425 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 477 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,28,918 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 4,232 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று மேலும் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,33,482 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 4,125 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,68,13,020 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 50,352 கொரோனா மாதிரிகள் பரிசேதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,64,99,151 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 50,193 பேருக்கு கொரோனா பரிசேதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.