தமிழக செய்திகள்

47-வது நினைவு தினம்: பெரியார் உருவப்படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

பெரியாரின் நினைவுநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

பெரியாரின் 47-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை அண்ணா சாலையில் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.

அதனைதொடர்ந்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் பெரியார் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு