தமிழக செய்திகள்

சென்னையில் 49 மின்சார ரெயில் சேவைகள் ரத்து

திருநின்றவூர் ரெயில்வே பணிமனையில் வருகிற 23-ந்தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருநின்றவூர் ரெயில்வே பணிமனையில் வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 3.40 மணி வரையில் (8 மணி நேரம் 40 நிமிடம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

இதன் காரணமாக அன்று காலை 6.30, 8.20, 11 மணிக்கு சென்டிரல் -அரக்கோணத்துக்கும், காலை 7, 7.25, 9.10 மணிக்கு சென்டிரல்-திருத்தணிக்கும், காலை 10.45 மணிக்கு சென்டிரல்-ஆவடிக்கும், காலை 9.50 மணிக்கு சென்டிரல்- திருப்பதிக்கும், காலை 8.15, 8.55, 10 மணிக்கு அரக்கோணம்- சென்டிரலுக்கும், காலை 7 மணிக்கு திருவள்ளூர்- சென்டிரலுக்கும், காலை 10.15 மணிக்கு திருத்தணி- சென்டிரலுக்கும், காலை 6.20, 7.35, 8 மணிக்கு அரக்கோணம்-கடற்கரைக்கும், காலை 8.50 மணிக்கு திருத்தணி-கடற்கரைக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இதேபோல் காலை 11.15, மதியம் 12.55, 1.40, மாலை 3.45 மணிக்கு திருவள்ளூர்-திருத்தணிக்கும், மதியம் 12, 2.15 மாலை 3 மணிக்கு திருவள்ளூர்-அரக்கோணத்துக்கும், காலை 10.30, 11.15 மதியம் 12, 1.30, 2.15 மணிக்கு அரக்கோணம்-திருவள்ளூருக்கும், மதியம் 12.35 மணிக்கு திருத்தணி-திருவள்ளூருக்கும் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.