தமிழக செய்திகள்

விழுப்புரத்தில் கொலை முயற்சி வழக்கில் 5 பேர் கைது

விழுப்புரத்தில் கொலை முயற்சி வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் வி.மருதூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41). இவர் விழுப்புரம் கே.கே.சாலையில் பொது இ-சேவை மையம் வைத்து நடத்தி வந்த நிலையில் தற்போது கடையை மூடிவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பவுல் வெங்கடேசன், கணபதி, மணிபாரதி, தேவா, வெங்கடேசன் ஆகியோர் சுரேஷ் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரிடம், நாங்கள்தான் இந்த ஏரியாவில் பெரிய ஆளுங்க, எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி சுரேசை திட்டி உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். மேலும் சுரேசுக்கு ஆதரவாக செயல்பட்ட பக்கத்து வீட்டை சேர்ந்த ஏழுமலையின் வீட்டு முன்பக்க ஜன்னல் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினர். இதில் காயமடைந்த சுரேஷ், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவர், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பவுல்வெங்கடேசன் உள்ளிட்ட 5 பேர் மீதும் கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...