கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

திமுக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து நீக்கம்..!! - துரைமுருகன் அறிவிப்பு

திருப்பூர், தேனி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்டதாக திருப்பூர், தேனி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் காங்கேயம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் சூரியபிரகாஷ், தேனி நகர பொறுப்பாளர் டி.பாலமுருகன், பெரியகுளம் நகர பொறுப்பாளர் எஸ்.பி.முரளி, போடி நகரச் செயலாளர் மா.வீ.செல்வராஜ், நீலகிரி மாவட்டம், கூடலூர் ஒன்றியம், தேவர் சோலை பேரூர் செயலாளர் பி.மாதேவ் உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்