தமிழக செய்திகள்

தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து சோனியா காந்தியிடம் 5 பேர் கொண்ட குழு அறிக்கை சமர்ப்பிப்பு

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து 5 பேர் கொண்ட குழு சோனியா காந்தியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி 5 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்தார்.

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் சவான் தலைமையிலானா அந்த குழுவினர் அறிக்கையை தயார் செய்து சோனியா காந்தியிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில், அந்தந்த மாநிலங்களில் கட்சியின் கட்டமைப்பை சீரமைக்கும் பணிகள் தொடங்கும் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து