தமிழக செய்திகள்

மேலும் 5 ஏரிகள் நிரம்பின

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 5 ஏரிகள் நிரம்பின.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவ்வப்போது பலத்த மழை பெய்தது. மேலும் பச்சைமலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் மீண்டும் நிரம்பி வருகின்றன.

இதில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், லாடபுரம் பெரிய ஏரி, அரும்பாவூர் பெரிய ஏரி, வடக்கலூர் ஏரி, நூத்தப்பூர் ஏரி, வடக்கலூர் அக்ரகாரம் ஏரி, வெண்பாவூர் ஏரி, வெங்கலம் சிறிய ஏரி ஆகியவை ஏற்கனவே நிரம்பின.

தற்போது கீரைவாடி ஏரி, அகரம்சீகூர் ஏரி, ஒகளூர் ஏரி, குரும்பலூர் ஏரி, அரும்பாவூர் சிறிய ஏரி ஆகியவை நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் கீழப்பெரம்பலூர் ஏரி, செஞ்சேரி ஏரி, துறைமங்கலம் பெரிய ஏரி, கிழுமத்தூர் ஏரி ஆகியவை நிரம்பும் தருவாயில் உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்